திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனையா இது.? அதிர்ச்சியில் முழிபிதுங்கி நிற்கும் சிவகார்த்திகேயன்.!?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் சின்னத்திரையின் மூலம் தனது வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்தார். முதன் முதலில் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி தனது பேச்சுத் திறமையின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சின்ன திரையில் இருந்து வெள்ளி திரையில் 'மெரினா' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படம் பெரிதாக வெற்றி பெறாவிட்டாலும் ரசிகர்களின் பாராட்டை பெற்றது. இப்படத்திற்கு பின்பு பல ஹிட் திரைப்படங்களில் நடித்து சிவகார்த்திகேயன் தனது அட்டகாசமான நடிப்பு திறமையை காட்டியிருப்பார்.
இதனை அடுத்து சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அமரன் என்ற திரைப்படத்தில் நடித்துதுள்ளார். இந்திய ராணுவ வீரரான முகுந்தன் என்பவரின் வாழ்க்கை வரலாறு அடிப்படையாகக் கொண்டு அமரன் திரைப்படத்தின் கதைகளம் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகள் தற்போது நடந்து வருகிறது. மேலும் ஆகஸ்ட் மாதம் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என்று பட குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால் அதிலும் ஒரு சில பிரச்சினைகள் இருப்பதாக பட குழுவினர் கூறிவரும் நிலையில் படம் எப்போதுதான் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.