மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"என் அம்மா வீட்டில் நிறைய கொடுமைகளை சந்தித்தேன்" பேட்டியில் கண்கலங்கிய சினேகா..
கோலிவுட் திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் சினேகா. 2000 களின் ஆரம்பத்திலிருந்து பல தமிழ் திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். அன்றிலிருந்து இன்று வரை ரசிகர்கள் மனதில் அழியாத இடம்பெற்ற நடிகை சினேகா.
மேலும் சினேகா தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பெற்றிருக்கிறார். இவர் தன்னுடன் நடித்த சக நடிகரான பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு சில வருடங்கள் நடிக்காமல் இருந்த சினேகா மீண்டும் தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். பின்பு பட வாய்ப்பு குறைய தொடங்கியதால் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.
இது போன்ற நிலையில், சமீபத்தில் யு ட்யூப் சேனலில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சினேகா, தனது குழந்தை பருவ வாழ்க்கை குறித்து கண்கலங்கி பேசியிருக்கிறார். அந்த பேட்டியில் சினேகா கூறியதாவது, " என் வீட்டில் நான் மூன்றாவது பெண் குழந்தை. 3 பேரும் பெண்ணாக பிறந்து விட்டதால் என் பாட்டி என்னை பார்க்க கூட வரவில்லை. எங்கள் வீட்டில் எல்லா வேலைகளையும், நான் மட்டும்தான் செய்ய வேண்டும். அங்கு நான் பல கஷ்டங்களை சந்தித்தேன். இப்போதுதான் நான் நிம்மதியாக இருக்கிறேன்" என்று கண்கலங்கிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.