நடிகை சினேகாவுக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது..! என்ன குழந்தை தெரியுமா..?



Actress sneha delivered girl baby

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்தவர் நடிகை சினேகா. கடந்த 2012-ம் ஆண்டு பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஸ்னேகா. இவர்களுக்கு விஹான் என்ற மகன் உள்ளார்.

திருமணத்துக்குப் பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த சினேகா, கடைசியாக தனுஷ் உடன் பட்டாஸ் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது.

sneha

இந்நிலையில் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த சினேகாவுக்கு இன்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தை மாதம் நடந்துவரும் நிலையில், தை மகள் வந்தால் என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் நடிகர் பிரசன்னா. குழந்தை பிறந்ததை அடுத்து பலரும் தங்கள் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.