"ஹீரோவிற்கு அக்கா மாதிரி இருக்கீங்க" தொகுப்பாளினியின் கேள்வியால் அதிர்ந்த நடிகை சினேகா..



Actress sneha recent interview

சினிமாவில் ரஜினி, கமல் என்று தொடர்ந்து முன்னணியில் நடிகர்கள் இருப்பது போல், நடிகைகள் அப்படி தொடர முடிவதில்லை. திருமணம், குழந்தை என்று நடிகைகள் வாழ்க்கை திசை மாறி விடுவதால் தொடர்ந்து அவர்கள் நடிக்க வருவதில்லை எனலாம்.

sneha

அந்த வகையில், தமிழ் சினிமாவில் தன் வசீகரமான சிரிப்பினால் ரசிகர்களைக் கவர்ந்தவர் ஸ்னேகா. இவரது சிரிப்புக்காகவே ரசிகர்கள் இவரை "புன்னகை இளவரசி" என்று பட்டப்பெயர் சூட்டி அழைத்து வருகின்றனர். சினிமாவில் புகழில் இருந்த காலத்திலேயே நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்துகொண்டார்.

தற்போது ஸ்னேகா, பிரசன்னா ஜோடிக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். எனவே ஸ்னேகா சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு, தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார். இந்நிலையில், ஒரு பேட்டியில் பங்கேற்ற ஸ்னேகாவிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

sneha

அப்போது தொகுப்பாளர் ஸ்னேகாவிடம், "தற்போது நீங்கள் நடித்தால் ஹீரோவுக்கு அக்கா போல் இருப்பீர்கள்" என்று கூறினார். அதற்கு ஸ்னேகா, "அப்படியெல்லாம் இல்லை. நான் பிட்டாக தான் இருக்கிறேன். நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தால் கண்டிப்பாக நடிப்பேன்" என்று கூறியுள்ளார்.