#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அச்சச்சோ.. அப்படியா?.. பிரபல நடிகை வீட்டில் ரூ.1.4 கோடி மதிப்பிலான நகை கொள்ளை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
பிரபல நடிகையின் இல்லத்தில் இருந்து ரூ.1.4 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹிந்தி திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் சோனம் கபூர். இவரின் கணவர் ஆனந்த் அஹுஜா. இவர்களுக்கு சொந்தமான வீடு ஒன்று டெல்லியில் உள்ள அமிர்தா ஷெர்கில் மார்க் பகுதியில் உள்ளது. தற்போது சோனம் கபூர் கர்ப்பமாக இருக்கும் நிலையில், இருவரும் உலகை சுற்றிப்பார்த்து மகிழ்ச்சியுடன் வலம்வருகின்றனர்.
இந்த நிலையில், இவர்களின் டெல்லி இல்லத்தில் அவர்களின் குடும்பத்தினர் 3 பேர் தங்கியுள்ளனர். மேலும், வீட்டில் காவலர்கள், உடல்நிலை ஆலோசனைகள் கண்காணிப்பு அதிகாரி, வீட்டை சுத்தம் செய்பவர்கள், சமையலர்கள் என 25 க்கும் மேற்பட்டோர் இருக்கின்றனர். இப்படியான நிலையில், இவர்களின் இல்லத்தில் இருந்த ரூ.1.4 கோடி மதிப்பிலான நகை மாயமாகியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி கபோர்டில் இருந்த நகை மாயமானதை குடும்பத்தினர் உறுதி செய்த நிலையில், சுமார் 12 நாட்கள் கழித்தே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், குற்றம் செய்தவர்கள் இன்று வரை பிடிபடவில்லை. மேலும், இன்றுதான் இந்த நகை கொள்ளை தொடர்பான தகவலும் ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.