ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
காதல் பட நடிகை சந்தியாவா இது!! இப்போ எப்படி இருக்கார் பாருங்க.. வைரல் புகைப்படம்..
காதல் திரைப்படத்தின் நடிகை சந்தியாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
தனது முதல் படத்திலையே தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க நடிகைகள் ஒருவராக வளர்ந்தவர் காதல் சந்தியா. காதல் படத்தில் இவரது காதாபாத்திரம் பெரியளவில் வரவேற்பை பெற்றது. மேலும் படமும் மாபெரும் வெற்றிபெற்றதை அடுத்து இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது.
ஆனால் காதல் படத்திற்கு பிறகு இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படங்கள் ஓடவில்லை. இதனால் சினிமாவில் இருந்து விலகிய இவர், திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார். இந்நிலையில் நடிகை சுஜா வருணி தனது வீட்டில் கொண்டாடிய கிறிஸ்துமஸ் விழாவில் நடிகை காதல் சந்தியாவும் கலந்துகொண்டார். விழாவின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை சுஜா வருணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளநிலையில், அந்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் காதல் சந்தியாவா இது என கமெண்ட் செய்து வருகின்றனர்.