பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
எனக்கு இப்படி ஒரு வாழ்க்கை அமையும் என்று எதிர்பார்க்கவே இல்லை! மனம் திறக்கும் சன்னி லியோன்!
சன்னி லியோன் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு தனது கவர்ச்சியால், நடிப்பாலும் பிரபலமானவர். இவருக்கு திருமணம் ஆகி ஏழு வருடங்கள் ஆகிறது. அவரது திருமணம் காதல் திருமணமாகும். தனது கணவர் டேனியல் வெப்பருடன் நடந்த காதல் திருமணம் குறித்து முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார் சன்னி லியோன்.
ஆபாச படங்களை தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார் சன்னி லியோன்.தமிழில் வீரமாதேவி எனும் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தனது கணவர் டேனியல் வெப்பருடன் ஏற்பட்ட காதல் குறித்தும், திருமணம் குறித்தும் மனம் திறந்துள்ளார் சன்னி லியோன்.
நான் ஆபாச படங்களில் நடிப்பதை விரும்பாத என் கணவர், எனது வாழ்க்கையும், புகழும் அதில்தான் அடங்கி இருப்பதை புரிந்துகொண்டு அவரே என்னுடன் நடிக்க ஒப்புங்கொண்டார். பின்னர் நாங்கள் இருவரும் சேர்ந்து தனியாக ஒரு நிறுவனம் தொண்டங்கினோம் என்று கூறினார்.
அவர் என்னை பார்த்த முதல் பார்வையிலேயே காதலித்துவிட்டதாக கூறுவார். ஆனால் எனக்கு முதலில் காதல் வரவில்லை. என்னுடைய நம்பர் மற்றும் இமெயில் ஐடியை கண்டுபிடிச்ச அவர் முதலில் நம்பருக்கு கால் பண்ணாமல் இமெயில் அனுப்பினார். எனக்கு அது பிடித்திருந்தது. இமெயில் மூலமாக பேச ஆரம்பித்த பின்னரே நான் காதலிக்க தொடங்கினேன்.
சில நாட்களுக்கு முன்னர் தான் நாங்கள் காதலிக்க ஆரம்பித்தது போல உள்ளது எனக்கு. நான் கையில் மோதிரத்தை வைத்துக்கொண்டு பதற்றத்துடன் அவரிடம் என் காதலை சொல்ல நின்றுகொண்டிருந்தேன். நான் மிகவும் பயத்துடன் இருந்த அந்த நேரத்தில் அவர் மிகவும் எளிதாக ஒரு மோதிரத்தை எடுத்து ஐ லவ் யூ என்றார். அப்போது அந்த இடத்தில் வயலின் இசையும் நாங்கள் இருவரும் இருப்பது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. சந்தோஷத்தில் நான் துள்ளிக்குதித்தேன்.
நாங்கள் காதலிக்க தொடங்கிய சில மாதங்களில் என் தாய் இறந்துவிட்டார். அந்த நேரத்தில் யாராவது என்னுடன் இருக்க வேண்டும் என நான் விரும்பினேன். நான் எதிர்பார்த்தது போலவே அவர் என்னுடன் இருந்தார். அந்த நேரத்தில் யாராவது உடன் இருப்பது மிகவும் அவசியமானது. அதை அவர் செய்தார்.
எங்களுக்கு திருமணம் ஆகி ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டது, மூன்று குழந்தைகள் உள்ளது எங்களுக்கு. என்னுடைய கனவுகள் நிறைவேற அவர் உதவுகிறார். என்னால் என்ன செய்ய முடியும் என்பதை என்னைவிட அவர் அதிகம் நம்புவார். குழந்தைகள், நான், டேனி என அனைவரும் வீட்டில் ஒன்றாக இருக்கும் போது காலை உணவை அவர் தயார் செய்து எங்களுக்கு அளிப்பார். கனவில் கூட நினைத்துப்பார்க்க முடியாத வாழ்க்கையை நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என சன்னி லியோன் குறிப்பிட்டுள்ளார்.