திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
விஷாலின் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்த ஹீரோயினா இது.! இப்போ எப்படி இருக்காங்க பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவில் கடந்த 2010 ஆம் ஆண்டு திரு இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்தான் தீராத விளையாட்டுப் பிள்ளை. இந்த படத்தில் விஷால் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படம் ஹீரோவான விஷால் மூன்று பேரை காதலித்து அதில் தனக்கு பிடித்த ஒருவரை தேர்வு செய்வது போன்ற கதையை மையமாகக் கொண்டு உருவானது.
இதில் விஷால் காதலிக்கும் மூன்று ஹீரோயின்களாக சாரா ஜேன் டயஸ், தனுஸ்ரீ தத்தா, நீது சந்திரா ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் அவர்களுடன் சந்தானம் ,பிரகாஷ்ராஜ், மயில்சாமி, சத்தியன் ஆகியோரும் முக்கிய ரோலில் நடித்திருந்தனர். படத்தில் இடம்பெற்ற பாடல்கள், நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தது.
தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் ஜோதி என்ற கதாபாத்திரத்தில் அசத்தலாக நடித்திருந்தவர் நடிகை தனுஸ்ரீ தத்தா. இப்படத்தில் அவர் பிரகாஷ்ராஜ் தங்கையாக, துணிச்சலான பெண்ணாக நடித்து பிரபலமடைந்தார். இந்த நிலையில் தற்போது நடிகை தனுஸ்ரீ தத்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.