இந்தப் பெண் குழந்தை எந்த நடிகை தெரியுமா.. ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வரும் நடிகையா இது.?

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார். 90களின் ஆரம்பங்களில் இருந்து தற்போது வரை தனக்கான இடத்தை நிலைநாட்டி இருக்கும் த்ரிஷா, ரசிகர்களின் கனவு கன்னியாக இருக்கிறார்.
மாடலழகியான திரிஷா ஆரம்ப காலகட்டத்தில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்து தற்போது கதாநாயகியாக தனது நடிப்பு திறமையின் மூலம் உயர்ந்திருக்கிறார். சில வருடமாக தமிழ் சினிமாவில் நடிக்காமல் இருந்த திரிஷா தற்போது மீண்டும் கலக்கி வருகிறார்.
சமீபத்தில் த்ரிஷா நடிப்பில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றது. மேலும் த்ரிஷாவின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வந்தனர். தற்போது விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் 'லியோ' படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
இதுபோன்ற நிலையில், சமூக வலைத்தளங்களில் த்ரிஷாவின் புகைப்படம் அடிக்கடி வெளியாகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி வந்தது. தற்போது திரிசாவின் குழந்தை பருவ புகைப்படம் வெளியாகி இருக்கிறது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் "த்ரிஷாவா இது" என்று ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.