திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நடிகை வனிதாவை கொடூரமாக தாக்கிய மர்ம நபர்.. வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி.!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக்பாஸ். இந்நிகழ்ச்சி 6சீசன்களை தாண்டி ஏழாவது சீசனாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு இந்த சீசனில் பிரதீப் ஆண்டனி என்ற போட்டியாளருக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பப்பட்டனர்.
ரெட் கார்டு கொடுக்கப்பட்டதற்கு காரணமாக கூறப்படுவது, "பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அசிங்கமான வார்த்தைகளை பேசுகிறார். ஆபாசமாக நடந்து கொள்கிறார்" என்று கூறப்பட்டது. மேலும் பிரதீப் ஆண்டனிக்கு பேசுவதற்கு சான்ஸ் கூட கொடுக்கவில்லை என்று ரசிகர்கள் கருதி வந்தனர்.
பிரதீப் ஆண்டனி செய்தவற்றை தான் வீட்டில் இருக்கும் மற்ற போட்டியாளர்களும் செய்து வருகின்றனர் என்று ரசிகர்கள் இணையத்தில் கேள்வி கேட்டு வருகின்றனர். இதனை அடுத்து போட்டியாளர்களில் ஒருவரான வனிதாவின் மகள் ஜோதிகாவும் உரிமை குரல் தூக்கி பிரதிப்பிற்கு ரெட் கார்டு கொடுக்க சொன்னார்.
இதற்கு சப்போர்ட் செய்து யூ ட்யூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வந்தார் வனிதா. இதனை அடுத்து தற்போது வனிதா தன்னை மர்ம நபர் ஒருவர் தாக்கிவிட்டதாகவும், கண்ணில் மற்றும் கன்னத்தில் காயத்துடன் புகைப்படம் பதிவிட்டு உள்ளார். மேலும் ரெட் கார்ட் கொடுப்பியா என்ற கேள்வி கேட்டு என்னை அடித்துவிட்டார். இது பிரதீப் ஆண்டனி சப்போட்டர்ஸ் செய்த செயல் தான் என்று வனிதா பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவு இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
Bravely posting my attack . #BiggBoss7Tamil is just a game show on tv . I don’t deserve to go thru this pic.twitter.com/X6rI8io4GB
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) November 26, 2023