பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
"ராபர்ட் என்ன என் புருஷனா? இல்லை பாய் பிரண்டா?.. அவனுக்கு பல கல்யாணம் ஆகிருச்சு" - நடிகை வனிதா பகீர்..!
தமிழ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் நடன இயக்குனரான ராபர்ட் மாஸ்டரும் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். "நான் பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் காரணமே வேற" என்று கூறி வீட்டிற்குள் நுழைந்த அவர்,முதல் வாரத்திலேயே நடிகை ரச்சிதாவிடம் மறைமுகமாக ப்ரபோஸ் செய்திருக்கிறார்.
"நான் சிங்கிள் தான்" என்று அழுத்தமாக கூறி வீட்டை விட்டு வெளியே போனாலும், ரட்சிதாவுடன் நட்பு தொடர விரும்புவதாகவும் கூறினார். இந்நிலையில், இதற்கு முன்பு ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்த நடிகை வனிதா ஒரு சேனலில் ராபர்ட் குறித்து பேட்டியளித்துள்ளார்.
அதில், "ராபர்ட் என்ன என் புருஷனா? இல்லை பாய் பிரண்டா?. நான் பப்ளிசிட்டிக்காக அவனை யூஸ் செய்தேன். 2007ல் அவன் யாரையோ திருமணம் செய்தான். அது யார் என்பது எனக்கும் தெரியவில்லை. பல கல்யாணம் நடந்திருக்கு. அவன் மனைவி மற்றும் குழந்தை எங்கே? என தெரியவில்லை. தற்போது சிங்கிள் என இமேஜ் உருவாக்கிக்கொண்டு சுற்றி வருகிறான்" என கூறி இருக்கிறார். இது சர்ச்சையை கிளப்பியுள்ளது.