மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. வனிதாவின் 2-வது கணவருடன் சென்ற மகளா இது?.. புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து கூறிய வனிதா..!!
தமிழ் திரையுலகில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான நடிகை வனிதா விஜயகுமார். இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சில நிகழ்ச்சிகள், யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்து வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை பீட்டர் பால் என்பவருடன் வசித்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்தனர். தற்போது வனிதா விஜயகுமார் தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், அவர் கடந்த 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்த நிலையில், தம்பதிகளுக்கு மகன், மகள் இருக்கின்றனர். இவர்கள் சில காரணத்தால் 2007ல் விவாகரத்து செய்தனர்.
2007ல் இரண்டாவதாக ஆனந்த் ஜெயராஜன் என்பவரை அவர் திருமணம் செய்துகொண்ட நிலையில், இவர்களுக்கு ஜெனித்தா ராஜன் என்ற மகள் இருக்கிறார். தம்பதிகள் 2012ல் விவாகரத்து செய்துகொண்டனர்.
மகள்களுடன் வனிதா இருக்க ஆசைப்பட்டாலும், கணவரின் மேல்முறையீடு வனிதாவுக்கு எதிராக இருந்தது. இந்நிலையில், தனது மகளின் பிறந்தநாளை ஹைதராபாத் சென்று கொண்டாடிய வனிதா, அதுகுறித்த பதிவுகளை இன்ஸ்டகிராமில் இட்டுள்ளார்.