மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமணத்திற்கு முன்பே ஹனிமூன்னா!! வருங்கால கணவருடன் நடிகை வரலட்சுமி ஜாலி டூர்.! வைரல் புகைப்படங்கள்!!
சினிமாதுறையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வரலட்சுமி. இவர் முன்னணி நடிகரான சரத்குமாரின் மகள் ஆவார். நடிகை வரலட்சுமி தமிழ் சினிமாவில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த போடா போடி படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமடைந்தார்.
அதனைத் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் வந்த நிலையில் நடிகை வரலட்சுமி தொடர்ந்து பல படங்களில் சிறப்பாக நடித்து அசத்தினார். பின்னர் அவர் வில்லியாகவும் அவதாரமெடுத்து விஜய்யின் சர்க்கார், விஷாலின் சண்டக்கோழி 2 உள்ளிட்ட சில படங்களில் மிரட்டியிருந்தார். இந்நிலையில் அவருக்கு அண்மையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
நடிகை வரலட்சுமிக்கு அவரது நீண்ட நாள் காதலன் நிக்கோலாய் சச்தேவ் என்பவருடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. நிக்கோலாய் சச்தேவ் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர். அவருக்கு 15 வயதில் பெண்குழந்தை இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தது. இந்த நிலையில் தற்போது வரலட்சுமி தனது வருங்கால கணவருடன் தாய்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் அதனை கண்ட நெட்டிசன்கள் திருமணத்திற்கு முன்பே ஹனிமூன்னா!! என கேட்டு வருகின்றனர்.