மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இதுதான் பாதுகாப்பு! நீங்களும் லேட் பண்ணாதீங்க!! புகைப்படத்துடன் பிரபல இளம் நடிகை விடுத்த வேண்டுகோள்!!
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலையாக தீவிரமாக பரவி வந்தது. இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது. மேலும் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் தாங்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது காதல் கசக்குதய்யா, பள்ளி பருவத்திலே, மாயநதி போன்ற படங்களில் நடித்த நடிகை வெண்பா, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.
Finally! Vaccination done👍 and ellarum please get vaccinated as soon as possible, its "SAFE" for us nd people around us.... Do not delay🙏
— venba (@VenbaOfficial) June 14, 2021
Nd please wear a mask😷🙏#vaccinationdone #wearmask #StayHomeStaySafe pic.twitter.com/YPmWMvnXft
அந்தப் புகைப்படத்தை வெளியிட்ட அவர், இறுதியாக நான் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். நீங்களும் வெகு விரைவில் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். அது தான் நமக்கும் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் இருக்கும் பாதுகாப்பு. தாமத படுத்தாதீர்கள். மேலும் தவறாமல் முககவசம் அணியுங்கள் எனவும் கூறியுள்ளார்.