#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிரபல சின்னத்திரை நடிகைக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.! அடடா அழகான ஜோடி.!
தமிழ் சின்னத்திரையை பொருத்தவரையில் திறமை வாய்ந்த பல்வேறு கலைஞர்களுக்கு நல்ல எதிர்காலத்தை கொடுத்திருக்கிறது. அந்த வகையில், பல கலைஞர்கள் தமிழ் சின்னத்திரையில் நடிப்பதற்கு வருகை தந்து கொண்டிருக்கிறார்கள். அதேபோல பல நெடுந்தொடர்களும் ஒளிபரப்பாகி வருகிறது. பல தொலைக்காட்சிகளில் காலை தொடங்கி, இரவு வரையில் பல்வேறு நெடுந்தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
அந்த வகையில், சன் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல நெடுந்தொடரின் மூலமாக சின்னத்திரைக்கு அறிமுகமானவர்தான் நடிகை ஸ்வேதா, இந்த தொடரில் தொடக்கத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமானவர் நடிகை ஸ்வேதா. ஆனால், பின்னாளில் அந்த தொடரிலிருந்து திடீரென்று விலகினார். அதன் பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணெதிரே தோன்றினாள் நெடுந்தொடரில் ஒப்பந்தமாகி தற்போது நடித்து வருகிறார். அந்த நெடுந்தொடரும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த சூழ்நிலையில் தான் நடிகை ஸ்வேதாவிற்கு தற்போது நிச்சயதார்த்தம் முடிந்திருக்கிறது. அவர் தன்னுடைய எதிர்கால கணவருடன் நிச்சயதார்த்தம் நடந்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதை கண்ட ரசிகர்கள் சின்னத்திரை பிரபலங்கள் என பலரும் ஸ்வேதாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.