மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மேலும் தீவிரமடையும் சித்ராவின் மரண வழக்கு.. பிரபல நடிகை சரண்யாவிடம் விசாரணை..
நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக நடிகையும், சித்ராவின் தோழியுமான சரண்யாவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் பிரபலமடைந்த நடிகை சித்ரா கடந்த 9 ஆம் தேதி தனியார் ஹோட்டல் ஒன்றில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். சித்ராவின் கணவர் ஹேம்நாத் கொடுத்த மனஅழுத்தம் காரணமாகத்தான் சித்ரா தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் ஹேம்நாத்தை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
மேலும் சித்ராவின் பெற்றோர், மாமனார், மாமியார் ஆகோயோரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சித்ராவின் தற்கொலை தொடர்பாக சித்ராவின் அண்டை வீட்டார்களிடம் ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ தனது அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினார்.
அதேபோல் நடிகை சித்ராவின் நெருங்கிய தோழியான சரண்யாவிடமும் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ விசாரணை நடத்தியுள்ளார். சித்ராவின் தற்கொலைக்கு பணிசுமையும் ஒரு காரணமா எனவும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.