மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"உன் மேனி வெங்கல வெள்ளி" மெல்லிடையில் ரசிகர்களின் தூக்கம் கலைத்த அதிதி சங்கரின் கலக்கல் வீடியோ.!
இயக்குனர் சங்கரின் மகளாக இருப்பவர் அதிதி சங்கர். மருத்துவ படிப்பு படித்தவரான இவர் விருமன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் நடித்திரு வருகிறார்.
இந்தத் திரைப்படம் வெகு விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் விஷ்ணு விஷாலுடன் இவர் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக சில வாரங்களுக்கு முன்பு செய்தி வெளியாகியிருந்தது. அந்த செய்திகள் வதந்தி என அதிதிசங்கர் சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவரான இவர் தனது போட்டோ ஷூட் மற்றும் படப்பிடிப்பு தளங்களில் இருக்கும் புகைப்படங்களையும் தனது ரசிகர்களுக்காக சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருபவர். தற்போது இவர் தனது நடன வீடியோ ஒன்றையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
நண்பன் திரைப்படத்தில் தளபதி விஜயின் ஒல்லி பெல்லி பாடலுக்கு தனது இடையை அசைத்து ஆடும் அந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. ரசிகர்களும் அந்த வீடியோவை பகிர்ந்து வைரல் ஆக்கி வருகின்றனர்.