#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"இந்த ஹீரோயின் வேண்டாம் அந்த ஹீரோயின ஜோடியா போடுங்க" அடம் பிடித்தாரா ஜீவி பிரகாஷ்.. உண்மையை போட்டுடைத்த இயக்குனர்.?
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக வலம் வந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் வெற்றி பாடல்களை இசையமைத்து பிரபல இசையமைப்பாளராக தனது பெயரை நிலைநாட்டியவர் ஜிவி பிரகாஷ். இதன்பின்பு தற்போது திரைப்படங்களில் நடிப்பதில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார்.
ஜிவி பிரகாஷ் தமிழில் முதன் முதலில் 'டார்லிங்' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதன் பின்பு பென்சில், நாச்சியார், த்ரிஷா இல்லனா நயன்தாரா, ஜெயில் போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வந்தார்.
இதனையடுத்து தற்போது ஜிவி பிரகாஷ், கௌரி கிஷன் போன்றவர்கள் நடிப்பில் கோகுல் கிருஷ்ணன் இயக்கத்தில் 'அடியே' எனும் திரைப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டபோது அடியே திரைப்படத்தின் இயக்குனர் கோகுலகிருஷ்ணன் பத்திரிக்கையாளர்களிடம், "இப்படத்திற்காக முன்னதாக வேறு ஒரு கதாநாயகியை தான் செலக்ட் செய்தோம். பின்பு கௌரி கிருஷ்ணனை தேர்வு செய்து விட்டோம். இதற்கு காரணம் ஜிவி பிரகாஷ் இல்லை என்று தானாகவே முன்வந்து கூறினார். இதனால் பத்திரிகையாளர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டு ஜிவி பிரகாஷ் தான் இதற்கு காரணமா என்று கேள்வியை எழுப்பி வந்தனர். இச்செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.