#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இந்திய அளவில் ட்ரெண்டாகும் அஜித்தின் அழகிய காதல்.! சற்றுமுன் படக்குழு வெளியிட்ட அகலாதே பாடல் வீடியோ இதோ!!
பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இந்தப் படத்தை இயக்குனர் வினோத் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார்.
மேலும் இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை எதிர்த்து வாதிடும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்துள்ளார் வித்யாபாலன். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் பெண் சுதந்திரம், பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த சமூக கருத்துக்களை கூறும் நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஆகஸ்ட் 8 உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இத்தகைய படங்களில் நடித்த மாஸ் ஹீரோ அஜித்திற்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அஜித் மற்றும் வித்யா பாலனுக்கு இடையேயான அகலாதே’ பாடலின் வீடியோவை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தப் பாடலை அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.