திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அடேங்கப்பா..கெத்துதான்! செம மாஸாக நடிகை ஐஸ்வர்யா மேனன் செய்த காரியத்தை பார்த்தீங்களா!! வைரலாகும் வீடியோ!!
நடிகை ஐஸ்வர்யா மேனன் கடுமையாக ஒர்க்அவுட் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.
தமிழ் சினிமாவில் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். அதனை தொடர்ந்து அவர் ஆப்பிள் பெண்ணே, தீயா வேலை செய்யணும் குமாரு, வீரா,தமிழ் படம் 2, நான் சிரித்தால் போன்ற சில தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் பிஸியாக இருக்கும் நடிகை ஐஸ்வர்யா மேனன் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். அவை இணையத்தில் வைரலாகி லைக்ஸ்களை குவிக்கும்.
இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா மேனன் தற்போது ஜிம்மில் கடுமையாக ஒர்க்-அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவுடன் அவர், லாக்டவுன் நேரத்தில் சேர்ந்த கலோரிகளுக்கு பை பை என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு ஒரு லட்சத்திற்கும் மேலான லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.