#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய் இந்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கிறாரா? செம ஷாக்கில் ரசிகர்கள்!
மணிரத்னம் இயக்கத்தில் மிகப்பெரும் பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகிவரும் வரலாற்று காவியம் பொன்னியின் செல்வன். இப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.
இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராக உள்ளது. இதனை லைகா நிறுவனம் தயாரித்துள்ளனர். மேலும் இப்படத்திற்க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் படப்பிடிப்புகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அப்படத்தில் பிரபு மற்றும் சரத்குமார் இருவரும் பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்தது. ஆனால் தற்போது சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் சரத்குமாருக்கு பதிலாக நிழல்கள் ரவி நடிக்கவிருப்பதாகவும், நடிகர் சரத்குமார் கடினமான மற்றொரு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பெரிய பழுவேட்டரையரின் காதலியான நந்தினி என்ற கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், பிரபுவுக்கு ஜோடி நடிகை ஐஸ்வர்யா ராய்தானா என ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் கேள்வியெழுப்பி வருகின்றனர்.