மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இப்படி பண்றாங்களே., இனி யாரும் திருமண வீட்டிற்கு ஐஸ்வர்யா ராயை அழைக்காதீங்க,.! ரசிகர்களின் குமுறல்.. வைரலாகும் புகைப்படம் உள்ளே.!
இந்தியாவின் மிக பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி மற்றும் நீட்டா அம்பானியின் மகள் இஷா அம்பானி.
இஷா அம்பானிக்கும், பிரபல ரியல் எஸ்டேட் அதிபரான அஜய் பிராமலின் மகன் ஆனந்த் பிராமலினுக்கும் நேற்று முன்தினம் மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.
மேலும் அந்த திருமண விழாவில் திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் , அரசியல் பிரபலங்கள் என பலரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சன், மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டார். அப்பொழுது ஐஸ்வர்யா சிவப்பு நிற டிசைனர் சேலை அணிந்து மிகவும் அழகாக வந்திருந்தார். மேலும் அவர் தனது கணவர், மகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டார். அந்த புகைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் மிகவும் அழகாக இருந்தார்.
அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் ஈர்ப்பை பெற்றது,மேலும் அதனை கண்ட ரசிகர்கள் அனைவரும் ஐஸ்வர்யா ராய் மிக அழகாக தெரிவதால் மணமகளை விட அதிகம் கவனம் ஈர்க்கிறார், திருமண நிகழ்ச்சிகளுக்கு அவரை அழைப்பதை நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.