திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஐபிஎல் பார்க்க கொல்கத்தா சென்ற ஐஸ்வர்யா ரஜினி! அட.. கூட யார் போயிருக்காங்க பார்த்தீங்களா! வைரலாகும் புகைப்படம்!!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவர் கடந்த 2004-ம் ஆண்டு முன்னணி நடிகரான தனுஷை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் திருமணமாகி 18 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த அவர்கள் விவாகரத்து பெற்று பிரியப் போவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தனர்.
இது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தற்போது அவரவர் பணிகளில் பிஸியாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் ஐஸ்வர்யா தற்போது கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியை காண சென்றுள்ளார்.
மேலும் அவருடன் மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா ஆகியோரும் சென்றுள்ளனர். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் ஐஸ்வர்யா ரஜினி அங்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியை சந்தித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.