மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அச்சோ! ஏம்மா இவ்வளவு ரிஸ்க்! ஐஸ்வர்யாவை அக்கறையோடு எச்சரிக்கும் நெட்டிசன்கள்! வைரல் வீடியோ!!
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக, சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவர் கடந்த 2004-ம் ஆண்டு நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் திருமணமாகி 18 ஆண்டுகளுக்கு பிறகு ஐஸ்வர்யா- தனுஷ் இருவரும் விவாகரத்து பெற்று பிரியப் போவதாக அறிவித்தனர்.
இது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் அவரவர் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். டைரக்ஷனில் இறங்கிய ஐஸ்வர்யா பயணி என்ற மியூசிக் வீடியோவை இயக்கி மூன்று மொழிகளில் வெளியிட்டுள்ளார்.
மேலும் லாரன்ஸ் நடிப்பில் நேரடியாக பாலிவுட் படத்தை இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா வொர்க் அவுட் செய்யும் வீடியோ, ஜாக்கிங், யோகா செய்யும் புகைப்படங்கள் போன்றவற்றை வெளியிடுவார். இந்நிலையில் அவர் தற்போது வெயிட் தூக்குவது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். அதனைக் கண்ட நெட்டிசன்கள் ஏன்மா ரிஸ்க்? பெல்ட் போடாமல் வெயிட் தூக்காதீங்க என அக்கறையோடு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.