மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ப்பா.. செம லக்கிதான்! ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நேரில் சென்று யாரை சந்தித்துள்ளார் பார்த்தீங்களா! வைரலாகும் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் கடந்த 2004-ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இருவரும் சில மாதங்களுக்கு முன் விவாகரத்து பெற்று பிரியபோவதாக அறிவித்தனர்.
இது ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அதனைப் பொருட்படுத்தாமல் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் அவரவர் பணிகளில் பிஸியாக இருந்து வருகின்றனர். ஐஸ்வர்யா சமீபத்தில் இசை ஆல்பம் ஒன்றை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து அவர் பாலிவுட்டிலும் படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்தநிலையில் அண்மையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்துள்ளார். மேலும் அங்கு இசைஞானி மியூசிக் வாசிக்க அதனை ஐஸ்வர்யா மெய்மறந்து ரசித்துள்ளார். அந்தப் புகைப்படங்களை அவர் இணையத்தில் வெளியிட்ட நிலையில் அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.