திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அம்மாடியோவ்.! ஐபிஎல் ஃபைனல் பார்க்க சென்ற ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் வரலட்சுமி .... டிக்கெட்டின் விலை இவ்வளவா.?
இந்தியன் பிரிமியர் லீக் எனப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன. நேற்று நடைபெற இருந்த போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
அந்தப் போட்டி இன்று மீண்டும் நடைபெற இருக்கிறது. கடந்த வருடம் சென்னை அணி மோசமாக விளையாடி வெளியேறியதால் இந்த முறை கோப்பையை வென்றே ஆக வேண்டிய முனைப்பில் இருக்கிறது. மேலும் இந்த போட்டியை காண சென்னையிலிருந்து ஏராளமான ரசிகர்கள் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு சென்றுள்ளனர்.
நேற்றைய போட்டி ரத்து செய்யப்பட்டதால் இங்கிருந்து சென்ற பெரும்பாலான ரசிகர்கள் ரயில் நிலையங்களில் உறங்கிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவின. திரைத்துறை பிரபலங்களும் இந்த போட்டியை காண்பதற்காக அகமதாபாத் சென்றிருக்கின்றனர்.
#CSK wooohoooo @ChennaiIPL #IPL2023Final pic.twitter.com/Msf7LrxBVg
— 𝑽𝒂𝒓𝒂𝒍𝒂𝒙𝒎𝒊 𝑺𝒂𝒓𝒂𝒕𝒉𝒌𝒖𝒎𝒂𝒓 (@varusarath5) May 28, 2023
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா மற்றும் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் தங்களது டிக்கெட் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருக்கின்றனர். அதில் ஒரு டிக்கெட்டின் விலை 50 ஆயிரம் ரூபாய் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனை குறிப்பிட்டு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.