வாவ்! நடிகர் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இப்படியொரு ஆசையா? நீண்டகால கனவு நிறைவேறுமா?



aishwaya-rajesh-wish-to-act-in-manorama-biopic

தமிழ் சினிமாவில் காக்கா முட்டை என்ற திரைப்படத்தில் இரு பிள்ளைகளுக்கு அம்மாவாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதனைத் தொடர்ந்து அவர் தர்மதுரை, வடசென்னை, செக்க சிவந்த வானம், கனா, நம்ம வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் கதாநாயகியாகதான் நடிப்பேன் என்று இல்லாமல், கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அதனை தொடர்ந்து தற்போது அவரது நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் பூமிகா. இதில் அவர் மனநோய் மருத்துவராக நடித்துள்ளார். இப்படத்தை ரதீந்திரன் ஆர்.பிரசாத் இயக்கியுள்ளார். கார்த்திக் சுப்புராஜ், சுதன் ஆகிய இருவரும் தயாரித்துள்ளனர். 

aishwarya

இந்நிலையில் இப்படம் குறித்து பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், எனக்கு இது 25வது படம். நான் பொதுவாக கதையும், கதாபாத்திரமும் பிடித்தால் மட்டுமே நடிப்பேன். அப்படி நடித்த படங்களில் ஒன்றுதான் பூமிகா. எனக்கு வரலாற்று படங்களில் நடிக்க வேண்டும் என்பது ஆசை. மேலும் நடிகை மனோரமாவின் பயோபிக் படத்தில் நடித்து தேசிய விருது வாங்க வேண்டும் என்பது எனது நீண்ட கால ஆசை. அது மட்டும் நிறைவேறினால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என்று கூறியுள்ளார்.