மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"மகளின் பிறந்தநாளுக்கு உருக்கமாகப் பதிவிட்டு வாழ்த்து கூறிய ஐஸ்வர்யா ராய்!"
1994ம் ஆண்டு உலக அழகிப்பட்டம் வென்றவர் ஐஸ்வர்யா ராய். ஹிந்தி, தமிழ், பெங்காலி மற்றும் ஆங்கில மொழிப்படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராய், 1997ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய "இருவர்" படத்தில் தமிழ் சினிமாவில் தான் முதன் முதலில் அறிமுகமானார்.
தொடர்ந்து தமிழில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களிலும் நடித்துள்ளார். 2007ம் ஆண்டு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகனும், பாலிவுட் நடிகருமான அபிஷேக் பச்சனைத் திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார். இவர் 2011ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி பிறந்தார். இந்நிலையில் இவர்களது 16 ஆண்டுகால திருமண வாழ்க்கையைப் பற்றி கூறிய அபிஷேக் பச்சன், "அவர் வாழ்க்கையின் கடினமான காலங்களை மிகவும் கண்ணியத்துடன் சாமர்த்தியமாகக் கடந்து வந்துள்ளார்.
நான் அவரைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறேன்" என்று கூறியுள்ளார். இந்நிலையில் இத்தம்பதியின் மகள் ஆராத்யாவிற்கு 12வது பிறந்தநாளை முன்னிட்டு ஐஸ்வர்யா-அபிஷேக் இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான வாழ்த்து தெரிவித்துள்ளனர்.