திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
என்னது ஐஸ்வர்யா ராய் உடலில் 200கிலோ தங்கமா.. வெளியான பகீர் தகவல்.!
1994ம் ஆண்டு நடந்த உலக அழகிப்போட்டியில் கலந்து கொண்டு, உலக அழகிப்பட்டம் வென்றவர் ஐஸ்வர்யா ராய். இதன்பிறகு இவர் தமிழ் சினிமாவில் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய "இருவர்" படத்தில் அறிமுகமானார்.
அதன்பிறகு அவர் பாலிவுட்டில் பிஸியாகி விட்டாலும், தமிழிலும் தொடர்ந்து படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். இயக்குனர் ஷங்கரின் ஜீன்ஸ், எந்திரன், ராஜிவ் மேனன் இயக்கத்தில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படங்களில் நடித்தார்.
மீண்டும் அவர், மணிரத்னம் இயக்கிய இராவணன், பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களிலும் நந்தினி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் இவர் நடிப்பு மிகவும் பேசப்பட்டது. இந்நிலையில் அவர் ஹிந்தியில் 'ஜோதா அக்பர்' படத்தில் நடித்த போது 200 கிலோ தங்க நகைகள் அணிந்திருந்தார் என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் வெளியான செய்தியில், " ஜோதா அக்பர் படத்தில் ஐஸ்வர்யா ராய் 200கிலோ ஒரிஜினல் தங்க நகைகளை உடல் முழுவதும் அணிந்திருந்தார் என்றும், இதற்காக அவருடன் எப்போதும் 50 பாதுகாவலர்கள் படப்பிடிப்பில் இருந்தனர் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.