மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தேவதை சார் அவ.! ஐஸ்வர்யா ராஜேஷ் புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்.!?
சின்னத்திரையில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை ஆரம்பித்த ஐஸ்வர்யா ராஜேஷ், தனது நடிப்பு திறமையின் மூலம் வெள்ளி திரையில் தற்போது கதாநாயகியாக கொடிகட்டி பறந்து வருகிறார். பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
இவர் நடிப்பில் வெளியான காக்கா முட்டை, கனா, நம்ம வீட்டு பிள்ளை, தர்மதுரை போன்ற பல ஹிட் திரைப்படங்கள் ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளது. குறிப்பாக 'காக்கா முட்டை' திரைப்படத்தில் இரு குழந்தைகளுக்கு அம்மாவாக தனது அட்டகாசமான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருப்பார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
மேலும் தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் திரைக்கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் ஃபர்ஹானா, தி கிரேட் இந்தியன் கிச்சன், சொப்பன சுந்தரி, டிரைவர் ஜமுனா போன்ற திரைப்படங்கள் பெரிதளவில் வெற்றி பெறாவிட்டாலும் ரசிகர்களின் பாராட்டை பெற்றது
இவ்வாறு சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலையில் கண்களை கவரும் வண்ணம் புகைப்படம் எடுத்து அதனை பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தேவதை போல் இருக்கிறீங்க என்று வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.