மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"சாக்லேட் நிறத்தில் ரெட் வெல்வெட் கேக் போல் இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!" புகைப்படங்கள் வைரல்!
2010ஆம் ஆண்டு "நீதானா அவன்" என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் ஐஸ்வர்யா ராஜேஷ். முன்னதாக இவர் சன் டிவியில் "அசத்தப்போவது யாரு" நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்தார். தொடர்ந்து "மானாட மயிலாட" நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.
இதையடுத்து திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தொடர்ந்து தமிழில் அட்டகத்தி, காக்கா முட்டை, ஆறாது சினம், தர்மதுரை, கட்டப்பாவ காணோம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
இதில் காக்கா முட்டை படத்திற்காக சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் விருதை வென்றுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். மேலும் தர்மதுரை படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வென்றுள்ளார். தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
அவர், தற்போது சிவப்பு நிற உடையில் பெல் பட்டம் பேண்ட் அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் "சாக்லேட் நிறத்தில் ரெட் வெல்வெட் கேக் போல் இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்" என்று கூறி வருகின்றனர்.