மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நர்ஸாக மாறிய ஐஸ்வர்யா ராஜேஷ்.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்..
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார். தமிழில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்தி வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
பல வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் இவரது திரைப்படத்திற்கென்று தனி ரசிகர் கூட்டங்கள் இருந்து வருகின்றனர். மேலும் தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களை கவர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக பெயர் பெற்று உள்ளார்.
இந்நிலையில் அறிமுக இயக்குனர் சவரிமுத்து இயக்கத்தில் துவாரகா புரொடக்ஷன் தயாரிக்கும் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தில் யோகி பாபு, சுனில் ரெட்டி, சந்தானம் பாரதி போன்ற பல பிரபலங்கள் நடிக்கவுள்ளனர்.
மேலும் டி இமான் இசையமைக்கவுள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நர்ஸ் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படத்தில் நர்ஸக நடிக்கவிருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.