திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நர்ஸாக மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்.! அவருடன் இணையும் பிரபலங்கள்.! வெளிவந்த சூப்பர் தகவல்!!
தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும், அதனை எடுத்து சிறப்பாக நடிக்கக் கூடியவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் காக்கா முட்டை,ரம்மி,கனா,வடசென்னை போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். ஆனால் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த கிச்சன்,சொப்பன சுந்தரி,டிரைவர், ஜமுனா போன்ற சில படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில் தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் புதிய படம் ஒன்றில் இணைந்துள்ளார். இப்படத்தை மார்க் ஆண்டனி படத்திற்கு திரைக்கதை எழுதிய சவரிமுத்து இயக்குகிறார். மேலும் இதில் யோகி பாபு, சுனில் ரெட்டி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நர்சாக நடிக்க உள்ளார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜை விழா நேற்று நடைபெற்றுள்ளது. மேலும் பூஜை முடிந்தவுடனேயே படப்பிடிப்பை துவங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். துவாரா ப்ரொடக்சன் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.