மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஐஸ்வர்யா ராஜேஷ் அடுத்ததாக எந்த இயக்குனரின் படத்தில் நடிக்க போகிறார் தெரியுமா .!?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறார். சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் கதாநாயகியாக கலக்கி வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இவ்வாறு தமிழ் சினிமாவில் தனது நடிப்பு திறமையின் மூலம் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டி இருக்கிறார்.
குறிப்பாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் கதைக்களம் கொண்ட திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். 2011 ஆம் வருடம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக காலடி எடுத்து வைத்த ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழில் காக்கா முட்டை, கா. பெ. ரணசிங்கம், வடசென்னை போன்ற பல திரைப்படங்களில் தனுஷ், விஜய் சேதுபதி போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படமான டிரைவர் ஜமுனா, ரன் பேபி ரன், தி கிரேட் இந்தியன் கிச்சன், பர்ஹானா போன்ற பல திரைப்படங்களில் தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். துருவ நட்சத்திரம், இடம் பொருள் ஏவல் போன்ற திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். இப்படங்கள் வெளியாவது குறித்து ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
இதுபோன்ற நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஓ மை கடவுளே, பேச்சுலர் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மனோ பாரதி என்பவர் இயக்கத்தில் வலையம் என்ற திரைபடத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போவதாக பதிவிட்டுள்ளார். இப்பதிவு ஐஸ்வர்யா ராஜேஷ் ரசிகர்களால் ஷேர் செய்யபட்டு வருகிறது.