மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உலகளவில் ரூ.200 கோடி வசூல் செய்த அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா நடித்த சைத்தான்; மகிழ்ச்சியில் படக்குழு.!
நடிகர்கள் அஜய் தேவ்கன், ஜோதிகா, ஜானகி போடிவாளா உட்பட பலர் நடிப்பில், திகில் காட்சியுடன் உருவாகிய படம் சைத்தான் (Shaitaan). பில்லி, சூனியம் தொடர்பான கதையம்சத்தை அடிப்படையாக கொண்டு உருவான இப்படம், நல்ல வரவேற்பை பெற்றது. மாதவன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார்.
ஜியோ ஸ்டுடியோஸ், தேவ்கன் பிலிம்ஸ் தயாரிப்பில், அமித் திரிவேதி இசையில் படம் உருவாகி இருந்தது. ரூ.65 கோடி செலவில் தயாரான திரைப்படம், தற்போது வரை உலகளவில் ரூ.200 கோடியை கடந்து வசூல் சாதனை செய்துள்ளது.
படம் கடந்த 8 மார்ச் 2024 அன்று வெளியாகி, முதல் வாரத்தில் ரூ.81.60 கோடியும், இரண்டாவது வாரத்தில் ரூ.36.08 கோடியும், மூன்றாவது வாரத்தில் ரூ.20.04 கோடியும், நான்காவது வாரத்தில் ரூ.4.34 கோடியும் என மொத்தமாக இந்திய அளவில் ரூ.142.06 கோடி வசூல் செய்துள்ளது. உலகளவில் மொத்தமாக ரூ.201. 73 கோடி வசூல் செய்துள்ளது.