#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விடாமுயற்சி படப்பிடிப்பில் அஜித்துடன் இணைந்த முக்கிய பிரபலம்: இனி எல்லாம் அதிரடிதான்.!
மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா தயாரிப்பில், அனிரூத் இசையில் அட்டகாசமாக உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தின் தமிழ்நாடு வெளியீடு உரிமைகளை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
படத்தில் நடிகர்கள் அஜித் குமார், திரிஷா, ரெஜினா கசான்ரா உட்பட பலரும் நடித்து வருகின்றனர். படம் மே 2024ல் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Action King #Arjun sir at #VidaaMuyarchi shooting spot 💥#Ajith #AjithKumar pic.twitter.com/K8eGnHR5jk
— Gowtham ⱽᶦᵈᵃᵃᴹᵘʸᵃʳᶜʰᶦ (@GowthamNew) December 8, 2023
விவேகம், வேதாளத்தை தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் மூன்றாவது முறையாக இணைந்து இருக்கிறார். இந்நிலையில், படத்தில் நடிகர் அர்ஜுனும் இணைந்துகொண்டுள்ளார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
வெங்கட் பிரபுவின் மங்காத்தா திரைப்படத்தில் அர்ஜுன் - அஜித் காம்போ இறுதியாக உள்ள 3 நிமிட காட்சிகள் இன்று வரை ரசிகர்களால் மறக்க முடியாமல் இருந்தது. அதனைப்போல, ஒரு மாஸ் ரோலில் இருவரும் நடிக்கலாம் என எதிர்க்கபார்க்கப்படுகிறது.