மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தலைகீழாக கவிழ்ந்த கார்.! விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்.! ரசிகர்களை பதற வைத்த ஷாக் வீடியோ!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் துணிவு திரைப்படத்தை தொடர்ந்து தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.
மேலும் விடாமுயற்சி படத்தில் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா, சந்தீப் கிஷன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அஜர்பைஜான் நாட்டில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்நிலையில் அஜித் மற்றும் ஆரவ் இருவரும் காரில் சென்று விபத்துக்குள்ளாவது போன்ற வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அதில் அஜித் வேகமாக ஓட்டி செல்கிறார். அப்பொழுது கட்டுப்பாட்டை இழந்த கார் அங்கு பாலைவனத்தில் கவிழ்ந்துள்ளது. இந்த காட்சி, விடாமுயற்சி படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சி என யூகிக்கப்படுகிறது. ஆனாலும் ஆபத்தான காட்சிகளை படமாக்கும் போதும் கூட ஸ்டண்ட் கலைஞர்கள் இன்றி அவரே நடித்து வருவது பலரையும் வியக்க வைத்துள்ளது. மேலும் இந்த வீடியோ ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
Vidaamuyarchi filming
— Suresh Chandra (@SureshChandraa) April 4, 2024
November 2023.#VidaaMuyarchi pic.twitter.com/M210ikLI5e