மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பப்லுவிடம் ஷாலினியை சாரி கேட்கச் சொன்ன அஜித்! அந்த படத்துல ஹீரோவா வேணாம்...?
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பிருத்விராஜ். 1979 ஆம் ஆண்டு வெளியான நான் வாழவைப்பேன் என்ற திரைப்படத்தில் பப்லு என்ற கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அன்றிலிருந்து இவர் பப்லு பிரித்திவிராஜ் என்று அழைக்கப்படுகிறார். பாலச்சந்தர் இயக்கிய வானமே எல்லை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அஜித் குமார் நடிப்பில் வெளியான அவள் வருவாளா திரைப்படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மர்மதேசம், அரசி, வாணி ராணி உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் தொடர்ந்து நடித்து வந்தவர் இவர். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் என்ற நடன நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் நடுவரான சிலம்பரசனுடன் இவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது அனைவருக்கும் நினைவிருக்கும்.
தற்போது இவர் பெசன்ட் நகரில் பப்லு டீ ஷாப் என்ற தேநீர் கடையை நடத்தி வருகிறார். சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேட்டி அளித்திருக்கும் இவர் தனது திரை வாழ்க்கை பற்றியும் அதில் நடந்த சுவாரசியமான சம்பவங்கள் பற்றியும் பகிர்ந்திருக்கிறார். ஒரு காலகட்டத்தில் தெலுங்கு சினிமாவில் புகழின் உச்சியில் இருந்த இவர் அங்கிருந்த ஹீரோக்களின் அரசியலால் தெலுங்கு சினிமாவே வேண்டாம் என்று சென்னையில் செட்டிலானதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அஜித்குமாரின் மனைவி ஷாலினியுடன் ஆன ஒரு சுவாரசியமான சம்பவத்தையும் பகிர்ந்திருக்கிறார். இரண்டு முறை ஷாலினியை உணவகத்தில் வைத்து சந்தித்ததாக தெரிவித்திருக்கும் இவர் இரண்டு முறையும் அவருடன் பேசவில்லை.
ஒரு நாள் திடீரென ஷாலினியை இவருக்கு போன் செய்து உங்களை இரண்டு முறை சந்தித்தும் பேச முடியவில்லை என்னுடன் நீங்கள் நடிக்காததால் சிறிது தயக்கமாக இருந்தது அதனால் தான் பேசவில்லை என மன்னிப்பு கேட்டிருக்கிறாராம். இதற்கு ஏன் சாரி கேட்கிறீர்கள் என இவர் கேட்டதற்கு நடந்த விஷயத்தை அஜித்திடம் சொன்னேன் அவர்தான் உங்களிடம் சாரி கேட்கச் சொன்னதாக ஷாலினி தெரிவித்திருக்கிறார். இந்த விஷயத்தை நிகழ்ச்சியில் பகிர்ந்த அவர் அஜித் ஒரு ஜென்டில்மேன் என தெரிவித்தார்.