மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"அஜித் மகளா இது.. ஷாலினியவே மிஞ்சிடுவாங்க போலயே" வைரலாகும் புகைப்படங்கள்..
தமிழ் திரைத்துறையில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் அஜித். இவர் தமிழில் பல ஹிட் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறார். தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களை கவர்ந்து அஜித்தை தல என்று செல்லத்துடன் அழைத்து வருகிறார்கள்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் திரையரங்கில் வெளியாகிய மிகப்பெரும் வெற்றி அடைந்தது. இதனை அடுத்து தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
படத்தின் படப்பிடிப்பு பணிகள் பலகட்ட பிரச்சினைகளைத் தாண்டி தற்போது அஜர்பைஜான் நாட்டில் நடந்து வருகிறது. இவ்வாறு சினிமாவில் உச்சத்தில் இருக்கும் அஜித் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
மேலும் இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்த பெண் குழந்தையான அனோஷ்காவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் திருமணத்தில் எடுக்கப்பட்டது என்று கூறப்பட்டு வருகிறது.