மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடுரோட்டில் அஜித் ரசிகர்கள் செய்த இந்த மோசமான காரியத்தை பார்த்தீர்களா.! கிளம்பும் கடும் கண்டனங்கள்!!
பணத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் படத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆசையே இல்லாதவர் தல அஜித். இவர் தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக உள்ளார். இவருக்கென தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். மேலும் இவரது படங்கள் வெளியாகும் நாட்கள் மற்றும் அவரது பிறந்தநாளை ரசிகர்கள் கோலாகலமாக திருவிழாக்களை போல கொண்டாடி வருவர்.
இவர் தற்போது சமூக அக்கறையோடு படம் நடித்து வருகிறார். இந்நிலையில் இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது.
அதனை தொடர்ந்து தற்போது போனிகபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் வசூல் சாதனையும் குவிகிறது.
பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இப்படத்தை தொடர்ந்து அஜீத்துக்கு பெண் ரசிகர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் எப்பொழுதும் எளிமையாக இருக்கும் தலயின் ரசிகர்கள் சிலர் சமீபத்தில் திருச்சியில் நடுரோட்டில், பாதுகாப்பின்றி பிறருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மோசமாக சென்றுள்ளனர். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலான நிலையில், இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
😳🙄🤦🏼♀️ pic.twitter.com/GcT8XTXio4
— The Princess (@rajakumaari) August 20, 2019