மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அந்தரத்தில் கோளாறான ஆளில்லாத விமானம்! கவனமாக தரையிறக்கிய தல அஜித்! வைரல் வீடியோ!
நடிப்பில் மட்டுமல்லாமல், மற்ற விஷயங்களிலும் கவனம் செலுத்தி வருபவர் தல அஜித். இவருக்கு டிரோன், குட்டி ஏர்கிராஃப்ட் தொழில்நுட்பத்தில் ஆர்வம் உண்டு. பைக் ரேஸ், கார் ரேஸ், போட்டோகிராபி, ஏரோ மாடலிங் என பல ரசனைகளை கொண்ட மனிதர் ஆவார். இந்த ஊரடங்கு நேரத்தில் அஜித் கவனத்துடன் செயல்பட்டு ரிமோட் மூலம் இயக்கப்படும் குட்டி ஏர்கிராப்ட் தரையிறக்கும் வீடியோ காட்சி தற்போது வரவேற்பைப் பெற்றுள்ளது.
அந்த வீடியோவில், அஜித் இயக்கும் ஆளில்லா விமானம் புறப்பட்டு வானில் பறக்கிறது. சிறிது நேரம் ரவுண்ட் அடித்த பிறகு அதை தரையிறக்குகிறார்கள். கீழே இறங்க ரெடியாகும்போது, விமானத்தின் கியர் கோளாறாகி விடுகிறது. சரியாக இறக்க முடியவில்லை.
The trouble starts when the main landing doesn't work, Thala #Ajith sir bringing it down. The team appreciating for his landing.
— Ajith (@ajithFC) August 6, 2020
| #Aeromodelling | #Valimai️ | #ThalaAjith | pic.twitter.com/Z1JSA1YbEg
இதனையடுத்து கூடுதல் பொறுப்புடன் செயல்பட்ட அஜித், அதை சரியாக தரையிறக்குவதில் வெற்றிகண்டார். அந்த வீடியோ சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள், இது வேற லெவல் லேண்டிங் என்று கூறி வருகின்றனர்.