பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
இயக்குனர் சிவாவிற்கு, தல அஜித் கொடுத்த மாஸான பிறந்தநாள் பரிசு!! என்னனு தெரிஞ்சா நீங்களே ஷாக்காகிருவீங்க!!
தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் அஜீத். ரசிகர்களால் தல என செல்லமாக அழைக்கப்படும் அவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் அவரது படங்கள் வெளியிடும் நாட்களில் ரசிகர்கள் திருவிழா போல மிகவும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
அஜித் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற படம் விஸ்வாசம். இதில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், யோகி பாபு, விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
மகளுக்கும் தந்தைக்கும் இடையே உள்ள அன்பை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தை இயக்குனர் சிவா இயக்கியுள்ளார். சிவா இயக்கத்தில் அஜித் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என நான்கு படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் விஸ்வாசம் பட புரொமோஷனின் போது ஒரு பேட்டியில் இயக்குனர் சிவா பேசுகையில், விஸ்வாசம் படத்தில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற அடிச்சு தூக்கு பாடல் எனக்கு ரொம்ப ஸ்பெஷலான ஒன்று.
ஏனெனில் இந்த பாடலின் இறுதியில் அஜித் ஒரு மரண குத்து போட்டிருப்பார். அந்த பாடல் படப்பிடிப்பு காட்சி முடிந்ததும் அஜித் சிவாவிடம் இதுதான் உங்களுக்கு என்னுடைய பறந்தநாள் பரிசு என்று கூறியிருந்தாராம். இதனை சிவா மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.