திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஃபேன் பாய் டூ பேன் பாய் டைரக்டர்; அஜித் குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய குட் பேட் அக்லீ இயக்குனர்.!
தமிழ் திரையுலகில் நட்சத்திர நடிகராக வலம்வரும் நடிகர் அஜித் குமாருக்கு இன்று பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. பலரும் நேரில் வந்து அவருக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளத்திலும் வாழ்த்துக்கள் குவிகின்றன.
அஜித் குமார் தற்போது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்து குட் பேட் அக்லீ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இயக்குனர் ஆதிக் முன்னதாக தான் இயக்கிய 4 படங்களில் த்ரிஷா இல்லனா நயன்தாரா, மார்க் ஆண்டனி என இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். தற்போது அவர் அஜித்துடன் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "என் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு நன்றி அஜித் சார். ரசிகராக இருந்து, இன்று உங்களை இயக்கும் நிலைக்கு வந்துள்ளேன். மகிழ்ச்சியாக உள்ளது. பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என தெரிவித்துள்ளார்.
Happy birthday to My Sir❤️🙏🏻Wishing you a great year ahead sir 👑 ❤️❤️🙏🏻🙏🏻 First picture with Sir, from a Fan boy to a Fan boy director. unexplainable feeling🥹🙏🏻Been a very special journey. Thank u sir for giving me #GoodBadUgly 💥❤️🙏🏻 #HBDAjithKumar sir pic.twitter.com/ktu33zhF9l
— Adhik Ravichandran (@Adhikravi) May 1, 2024