மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொரோனா தடுப்பு நடவடிக்கை! கெத்தாக மாஸ் காட்டிய தல அஜித்.!
சீனாவில் ஆரம்பித்த கொரோனா உலக நாடுகளில் அதிகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 14 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இச்சூழலில், அனைத்து தொழில் நிறுவனங்களும் முடங்கியுள்ள நிலையில், சினிமா துறையும் இழப்பை சந்தித்துள்ளது.
இந்நிலையில், படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அதை சார்ந்து இயங்கும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இக்கட்டான இந்த சூழலை சமாளிக்க தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் சார்பில் நிவாரணம் வழங்கி உதவிபுரிந்திட வேண்டுகோள் வைக்கப்பட்டது. அதேபோல் மத்திய மாநில அரசுகளும் நிவாரண நிதியை அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த நிலையில், நடிகர் அஜித் திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். மேலும், கொரோனா தடுப்பு பணிக்காக நடிகர் அஜித், பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும், முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும் நன்கொடையாக வழங்கியுள்ளார்.