மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வடிவேலுவை ஓரங்கட்டிய அஜித்.. இது தான் காரணமா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நகைச்சுவை நடிகர் வடிவேலுவுடன் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தற்போது அதற்கான காரணம் வெளியாகி உள்ளது.
கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ராஜா படத்தில் தான் அஜித் குமார் உடன், வடிவேலு கடைசியாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் அஜித்தின் மாமாவாக வடிவேலு நடித்திருந்ததால், அஜித்தை மரியாதை இல்லாமல் வாடா போடா என வசனம் அமைக்கப்பட்டிருந்தது.
ஆனால், வடிவேலு படப்பிடிப்பு முடிந்த பிறகும் அஜித்தை வாடா போடா என பேசி கிண்டல் செய்து வந்துள்ளார். ஆனால் இது அஜித்துக்கு பிடிக்கவில்லை. அதுமட்டுமில்லாமல் மற்ற இடங்களிலும் கூட வடிவேலு, அஜித்தை மரியாதை இல்லாமல் பேசி வந்துள்ளார். இதனையடுத்து அஜித், இயக்குனரை அழைத்து இவ்வாறு பேச வேண்டாம் என அவரிடம் சொல்லுங்கள் என கூறியுள்ளார்.
இது குறித்து இயக்குனர் வடிவேலுவுடன் கூறியும், தன்னை மாற்றிக் கொள்ளாத வடிவேலு அஜித் உடன் அதே மாதிரியே பேசி வந்துள்ளார். இதனையடுத்து நடிகர் அஜித்குமார், இந்தப் படத்திற்குப் பிறகு எந்த இயக்குனர் கதை சொல்ல வந்தாலும், படத்தில் வடிவேலு கதாபாத்திரம் இருந்தால், அவர் இருந்தால் நான் நடிக்க மாட்டேன் என கூறி நடிக்க மறுத்து வந்துள்ளார்.