திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
விடாமுயற்சி படப்பிடிப்பில் தல அஜித் - திரிஷா எடுத்த போட்டோ வைரல்; அசத்தல் கிளிக் உள்ளே.!
இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், அனிரூத் இசையில், லைகா ப்ரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் தற்போது விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.
படத்தில் நடிகர்கள் அஜித் குமார், திரிஷா, அருண் விஜய், ரெஜினா கசான்ட்ரா, அர்ஜுன் தாஸ், ஆக்சன் கிங் அர்ஜுன், ஆரவ் உட்பட பலரும் நடித்து வருகின்றனர்.
தற்போது படப்பிடிப்புக்காக அர்ஜுன், திரிஷா, அஜித் குமார் உட்பட படக்குழு அஜர்பைஜானில் முகாமிட்டு இருக்கிறது. அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில் அஜித் ரசிகர்களுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இந்நிலையில், நடிகை திரிஷா மற்றும் அஜித் குமார் ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.