மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட.. சூப்பர்! வலிமை ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் அஜித் செய்த காரியம்! தீயாய் பரவும் வீடியோ!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவான படம் வலிமை. இப்படத்தை போனி கபூர் தயாரிப்பில், ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஹுமா குரேஷி, யோகிபாபு, கார்த்திகேயா, சுமித்ரா, புகழ், சங்கீதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
அஜீத் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள இப்படம் அண்மையில் திரையரங்கில் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் வலிமை சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
#Valimai shooting spot video 🔥😍#AjithKumar #HVinoth @BoneyKapoor pic.twitter.com/rItQLSp796
— Ajith Network (@AjithNetwork) March 10, 2022
அதில், அஜித் ட்ரோன் கேமராவை இயக்குகிறார். மேலும் படத்தில் சில காட்சிகளின் படப்பிடிப்பின்போது ட்ரோன் கேமராவை அவர்தான் இயக்கியுள்ளார். அஜித் டிரோன் கேமராவை இயக்குவதில் வல்லவர். மேலும் ஆளில்லா விமான வடிவமைப்பு ஆலோசகர் மற்றும் விமானியாக 10 மாதங்களாக அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.