மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அஜித்தின் விடாமுயற்சி படத்தின் கதை இணையதளத்தில் லீக்காகியதா.? ரசிகர்கள் அதிர்ச்சி.!
கோலிவுட் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் நடிகர் அஜித். கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியுடன் பல படங்களில் நடித்து அல்டிமேட்ஸ்டார் அஜித் என்று பெயர் பெற்றவர். சமீபத்தில் இவர் நடித்த 'துணிவு' திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியது.
மேலும், அஜித்தின் அடுத்த படமான ஏகே 62வை லைகா நிறுவனம் தயாரிக்க போவதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தின் தலைப்பு 'விடாமுயற்சி' எனவும் மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிக்கபோவதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியானது.
தற்போது, அஜித் இந்தியாவில் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. இதன்படி அஜித்தின் சுற்றுலா முடிந்தவுடன் படப்பிடிப்பு ஆரம்பமாக போவதாக படக் குழுவினர் கூறி வருகின்றனர்.
இது போன்ற நிலையில், 'விடாமுயற்சி' படத்தின் கதை இணையதளத்தில் லீக்காகி உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால் அது உண்மை இல்லை என படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர். விடாமுயற்சி படத்தின் தலைப்பில் கூகுல் லொகேஷன் சிம்பிள் இருப்பதால் இப்படம் பயணம் சம்பந்தப்பட்ட படமாக இருக்கும் என ரசிகர்கள் கருதி வருகின்றனர்