மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கிரிக்கெட் வீரர் நடராஜன் பிறந்த நாள் பார்ட்டியில் 'தல' அஜித்.. கேக் ஊட்டி வாழ்த்து.!
தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் பிறந்து தனது 20 வயது வரை டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் விளையாடிவிட்டு தனது திறமையை சர்வதேச அளவில் காட்டி தமிழகத்திற்கு பெருமை சேர்த்துக் கொண்டிருப்பவர் தான் தங்கராசு நடராஜன். தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் தன்னுடைய திறமையை நிரூபித்து, அதன் மூலம் தற்போது ஐபிஎல்-இல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கிறார்.
ஹைதராபாத் அணியின் முன்னணி வேக பந்து பேச்சாளராக இருப்பவரே நடராஜன் தான். இதற்கு முன்பாக இடதுகை வேகப்பந்து வீச்சாளரான இவர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் விளையாடிக் கொண்டிருந்தார். என்னதான் பஞ்சாப் அணியில் அவர் இடம்பெற்று இருந்தாலும் நடராஜனுக்கு அதில் சரி வர வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால், பந்து வீச்சில் முன்னணி அணியாக இருக்கும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அவரை முன்னணி வேகப்பந்து வீச்சாளராக மாற்றியுள்ளது.
இந்த நிலையில், தனது 33 வது பிறந்தநாளை இன்று அவர் கொண்டாடுகிறார். நேற்று இரவு அவரது பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்ட நிலையில் எதிர்பாராத நேரத்தில் இந்த கொண்டாட்டத்தில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டுள்ளார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கேக் வெட்டி நடராஜனுக்கு ஊட்டி தனது வாழ்த்துக்களை அஜீத் தெரிவித்துள்ளார். இது குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களை சுவாரசியத்தில் ஆழ்த்தியுள்ளது.