மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"மகனுக்காக ரொனால்டோவாக மாறிய தல.." அஜித் மகனுடன் கால்பந்து விளையாடும் வைரல் புகைப்படம்.!
விடாமுயற்சி முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து முடிந்த நிலையில் அடுத்த ஷெட்யூலுக்காக விரைவில் செல்ல உள்ளனர். இந்நிலையில் அஜித் தனது மகனுடன் கால் பந்து விளையாடும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. என்னதான் முன்னணி நடிகராக இருந்தாலும் தங்களது குழந்தைகளுக்கு முதலில் அப்பா என்பதை எந்த ஒரு நடிகரும் மறக்காமல் குழந்தைகளுக்காக அதிக நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.
ஏற்கனவே நடிகர் அஜித் தனது மகன் பள்ளியில் டயர் ஓட்டிய காட்சிகள் சில ஆண்டுகளுக்கு முன்பாக வைரலாகியது. மேலும் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் செலுத்தி வரும் தனது மகனுக்காக கோச்சிங் சென்டருக்கு அஜித் சென்ற காட்சிகளும் புகைப்படங்களாக வெளியாகி இருந்தன. இந்நிலையில் குழந்தைகளுடன் குழந்தையாக மாறி அஜித்தும் கால்பந்து விளையாட்டு விளையாடும் புகைப்படம் ஒன்று வேகமாக வைரல் ஆகி வருகிறது.
லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா, அர்ஜுன், பிக் பாஸ் ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்ட பலர் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. பல மாதங்களாக அந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வந்தது. சமீபத்தில் அங்கே சூட்டிங் முழுவதும் நிறைவடைந்து விட்டதாகவும் அடுத்ததாக மற்றொரு இடத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என லைகா அறிவித்தது.
இந்நிலையில், சென்னையில் சில நாட்கள் ஓய்விவெடுத்த அஜித்குமார் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். கால்பந்து விளையாடும் அஜித்
குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் நடக்கும் விழாக்களுக்கு எந்தவொரு மறுப்பும் தெரிவிக்காமல் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார்.சமீபத்தில் தனது மகன் கால்பந்து விளையாட்டில் தீவிரம் காட்டி வரும் நிலையில் அவனுடன் சேர்ந்து கால்பந்து விளையாடி மகிழ்ந்துள்ளார். அதன் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.